Posts

Showing posts from September, 2018

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!! கவின் என்பவர் வேலைத்தேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார். அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  உடனே கவின் மின்கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அந்த முகவரியை காட்டி வழி கேட்டார். அக்கடையிலிருந்தவர் கவினிடம் சிறிது தூரம் சென்றால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கே பார்வையற்ற ஓர் வயதான அம்மா இருப்பார். அதுதான் இந்த முகவரியுடைய வீடு எனக் கூறினார். கவினும் அங்கே சென்றார். தென்னங்கீற்றால் ஆன ஓர் சிறிய கொட்டகை தான் வீடு. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத...

இதில் முட்டாள் யார்? கழுதையா... சிங்கமா? இதில் யார் முட்டாள்?

இதில் முட்டாள் யார்? கழுதையா... சிங்கமா? இதில் யார் முட்டாள்? ஒரு அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. மிகவும் வயதான அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாததால், சாப்பிட எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டது. எத்தனை நாட்கள் தான் இப்படியே பசியில் இருப்பது உணவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது, சிங்கம். அச்சமயம் அந்தப் பாதையின் வழியே குள்ளநரி ஒன்று வந்தது. உடனே, சிங்கம் குள்ளநரியை உதவியாளனாக நியமிக்க முடிவு செய்தது. சிங்கம் நரியை அழைத்து 'இனிமேல் நீதான் என்னுடைய மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்" என்று கூறியது.  சிங்கம் கூறியதை நரி நம்பவில்லை. உடனே நரி 'ராஜா, உங்களுக்கு நான் மந்திரியாக இருப்பது என் அதிர்ஷ்டம்" என கூறியது. சிங்கம், இந்த காட்டுக்கே நான்தான் ராஜா. ராஜாவாக இருக்கும் நான் உணவுக்காக மற்ற விலங்குகளின் பின் சென்றால் அது நன்றாக இருக்குமா? அதனால் எனக்கு தேவையான உணவை சேகரிப்பது தான் உன்னுடைய வேலை என்று நரியிடம் கூறியது. நரி அதைக்கேட்டு பயந்து போய் நின்றது. ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு நம்மால் எப்படி உணவு ...