Posts

சீவகசிந்தாமணி | Sivakachindamani

Image
சீவகசிந்தாமணி !! Sivakachindamani !! கோவிந்தன் நிகழ்த்த போகும் போட்டியை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ★ சீவக சிந்தாமணி முந்தைய பதிவுகள் நமது நித்ரா காலண்டர் செயலியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்/கட்டுரைகள் பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படித்து மகிழுங்கள்..!!  சீவக சிந்தாமணி...!! ★ கட்டியங்காரன், இதற்கு முன் நிகழ்ந்த போட்டியில் ஏற்பட்டதை போன்று நிகழாமல் தடுக்க சில விஷயங்களை கூற துவங்கினான். ★ அதாவது எல்லா நாட்டில் இருக்கக்கூடிய அரசர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்தால், நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு பெரும் கவலையாக இருக்கும் அல்லவா! ஏதோ பெரிய போருக்கு வழி வகுத்து விடுமோ என்று அனைவரும் எண்ணுவார்கள் அல்லவா! ஆகையால் இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்பதை பற்றி நாம் யோசிப்போமா? என்று கேட்டான். ★ கோவிந்தன் கட்டியங்காரனின் கூற்றை கேட்டதும் பரவாயில்லையே! உமக்கும் மூளை இருக்கின்றது என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றாய் என்று நினைத்து கொண்டார். பின் மக்களுக்கு தெளிவாக கூறி விடுங்கள் போட்டியின் காரணமாக தான் எல்லா மன்னர்களையும் வரவழைக்கின்றோம் என...

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

Image
புறாவும் எறும்பும்.! The Ant and the Dove.! Bright kids stories, புறாவும் எறும்பும் ஒரு நாள் மிகவும் தாகமாக இருந்த எறும்பு ஒன்று, அருகில் இருந்த ஆற்றில் நீரருந்த சென்றது. தாகம் தீர நீரருந்திய எறும்பு, கரையில் ஏற முயன்ற போது, தவறிப்  போய் ஆற்றில் விழுந்து விட்டது. நீரோட்டம் வேகமாக இருந்ததால், ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப் பட்டது அந்த எறும்பு. நீரில் தத்தளித்த எறும்பு  உதவிக்காக துடித்து அலறியது. அப்போது அங்கு ஆற்றின் கரையில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறா ஒன்று, அபயம் தேடும் எறும்பின் குரலைக் கேட்டது. உடனே விர்ரென்று எறும்பின் அருகில் பறந்து வந்தது.  "என்னைக் காப்பாற்றேன் ! என்னைக் காப்பாற்றேன்! " என்று புறாவைப் பார்த்து பயத்தில் அலறியது எறும்பு. சற்று நேரம் யோசித்த புறா, மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக பறந்தது. மரத்தின் கிளையில் இருந்த இலைகள்  ஒவ்வொன்றாக பறித்து, நீரில் எறும்பு இருந்த இடத்திற்கு அருகில் போட்டது. மெல்ல தட்டுத் தடுமாறி, ஒருவாறு ஒரு இலையை பற்றிக் கொண்ட எறும்பு, அதன் மீது ஏறிக் கொண்டது. இலை மெல்ல நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அப்படியே மிதந்து, கரைக்கு அர...

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!!

Image
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!! Will raise the sound without knocking Drum… !! ஜப்பான் நாட்டுக் கதை : தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் ...

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!! கவின் என்பவர் வேலைத்தேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார். அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  உடனே கவின் மின்கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அந்த முகவரியை காட்டி வழி கேட்டார். அக்கடையிலிருந்தவர் கவினிடம் சிறிது தூரம் சென்றால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கே பார்வையற்ற ஓர் வயதான அம்மா இருப்பார். அதுதான் இந்த முகவரியுடைய வீடு எனக் கூறினார். கவினும் அங்கே சென்றார். தென்னங்கீற்றால் ஆன ஓர் சிறிய கொட்டகை தான் வீடு. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத...

இதில் முட்டாள் யார்? கழுதையா... சிங்கமா? இதில் யார் முட்டாள்?

இதில் முட்டாள் யார்? கழுதையா... சிங்கமா? இதில் யார் முட்டாள்? ஒரு அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. மிகவும் வயதான அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாததால், சாப்பிட எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டது. எத்தனை நாட்கள் தான் இப்படியே பசியில் இருப்பது உணவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது, சிங்கம். அச்சமயம் அந்தப் பாதையின் வழியே குள்ளநரி ஒன்று வந்தது. உடனே, சிங்கம் குள்ளநரியை உதவியாளனாக நியமிக்க முடிவு செய்தது. சிங்கம் நரியை அழைத்து 'இனிமேல் நீதான் என்னுடைய மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்" என்று கூறியது.  சிங்கம் கூறியதை நரி நம்பவில்லை. உடனே நரி 'ராஜா, உங்களுக்கு நான் மந்திரியாக இருப்பது என் அதிர்ஷ்டம்" என கூறியது. சிங்கம், இந்த காட்டுக்கே நான்தான் ராஜா. ராஜாவாக இருக்கும் நான் உணவுக்காக மற்ற விலங்குகளின் பின் சென்றால் அது நன்றாக இருக்குமா? அதனால் எனக்கு தேவையான உணவை சேகரிப்பது தான் உன்னுடைய வேலை என்று நரியிடம் கூறியது. நரி அதைக்கேட்டு பயந்து போய் நின்றது. ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு நம்மால் எப்படி உணவு ...

கெட்ட சகுணம்

Image
கெட்ட சகுணம் அக்பர், பீர்பாலிடம் பொதுவான விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, பீர்பால் உங்களுக்கு சகுணங்களில் நம்பிக்கை உண்டா? நம் நாட்டில் கெட்ட சகுணம் என்று சொல்லுமளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்றார். அக்பர் பீர்பால் கதை அக்பரின் கேள்வி பீர்பாலை வேதனை அடைய வைத்தது. அறிவு பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அரசர். இப்படி மூட நம்பிக்கைகளில் தம் மனதை திசை திருப்புவது, பீர்பாலுக்கு பிடிக்கவில்லை. தம் மனதுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசே மற்றவர்கள் கண்டு வெறுக்கும் படியான கெட்ட சகுனம் மிக்க ஒருவன் இவ்வூரில் வசிக்கிறான், காலையில் யாரும் அவனது முகத்தில் விழித்தாலே அன்றைய பொழுது முழுவதும் ஒரு வாய் சோறு கூட கிடைக்காது, படாத பாடு பாட வேண்டும் என்றார் பீர்பால். அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியை நான் பார்க்க வேண்டும் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள், அவன் முகத்தில் நான் விழிக்கிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்று ஆவல் பொங்க கூறினார் அக்பர். அடுத்த நாள் இரவு பீர்பால் ஒருவனை அழைத்து வந்தார். அரண்மனையில் தங்க வைத்தார். அக்பர் படுத்துறங்கும் அறையிலே...

குளிரில் நின்றால் பரிசு

குளிரில் நின்றால் பரிசு ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடி கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்தி கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து “பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்” என்றார். “அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்து விடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?” என்றார் பீர்பால். “யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்” என்றார் அக்பர். அரசரின் ஆணை நாடெங...