சீவகசிந்தாமணி | Sivakachindamani

சீவகசிந்தாமணி !!

Sivakachindamani !!

சீவகசிந்தாமணி !!  Sivakachindamani !!


கோவிந்தன் நிகழ்த்த போகும் போட்டியை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?

★ சீவக சிந்தாமணி முந்தைய பதிவுகள் நமது நித்ரா காலண்டர் செயலியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்/கட்டுரைகள் பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படித்து மகிழுங்கள்..!! 

சீவக சிந்தாமணி...!!

★ கட்டியங்காரன், இதற்கு முன் நிகழ்ந்த போட்டியில் ஏற்பட்டதை போன்று நிகழாமல் தடுக்க சில விஷயங்களை கூற துவங்கினான்.

★ அதாவது எல்லா நாட்டில் இருக்கக்கூடிய அரசர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்தால், நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு பெரும் கவலையாக இருக்கும் அல்லவா! ஏதோ பெரிய போருக்கு வழி வகுத்து விடுமோ என்று அனைவரும் எண்ணுவார்கள் அல்லவா! ஆகையால் இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்பதை பற்றி நாம் யோசிப்போமா? என்று கேட்டான்.

★ கோவிந்தன் கட்டியங்காரனின் கூற்றை கேட்டதும் பரவாயில்லையே! உமக்கும் மூளை இருக்கின்றது என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றாய் என்று நினைத்து கொண்டார். பின் மக்களுக்கு தெளிவாக கூறி விடுங்கள் போட்டியின் காரணமாக தான் எல்லா மன்னர்களையும் வரவழைக்கின்றோம் என்றும், இது ஆரோக்கியமான போட்டி தான் என்றும், பல நாடுகளுடன் இருக்கக்கூடிய நட்புறவை மேம்படுத்துவதற்காக தான் இந்த போட்டி நிகழ்த்தப்போகின்றோம் என்றும் கூறுவிடுங்கள் என்றார்.

★ கட்டியங்காரன் எப்படி கூறியும் கோவிந்தன் தன்னுடைய முடிவில் நிலையாக இருந்ததினால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாமல், இறுதியில் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கின்றேன் என்று ஒப்பு கொண்டான். உடனே, ஆமாம்... எந்த மாதிரியான போட்டிகளை அமைக்க போகின்றீர்கள்? என்று கேட்டான்.

★  அதற்கு கோவிந்தன், யாராலும் தோற்கடிக்க முடியாத பன்றி ஒன்றை கொண்டு வந்திருக்கின்றேன். அதை பொன் நகைகளால் அலங்காரம் செய்து விளையாட்டு அரங்கில் ஓட விட வேண்டும். சூரிய வெளிச்சத்தில் பொன் நகைகளானது கண்களை கூசும் அளவிலான எதிரொளிப்பை ஏற்படுத்தும். அதனால் அந்த பன்றியை வீழ்த்துவது என்பது முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட பன்றியை யார் ஒருவர்? ஒரே அம்பில் வீழ்த்துகின்றாரோ, அவரே எனது மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

★ இந்த போட்டியானது மிகவும் கடினமாக இருக்கும் போல தோன்றுகின்றதே! அது சரி உங்கள் விருப்பப்படியே அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விடுகின்றேன் என்று கூறினான் கட்டியங்காரன்.

★ பின் கோவிந்தன் தனது ஜோதிடரிடம் கலந்தாலோசித்து போட்டியை நிகழ்த்துவதற்கான தேதியை முடிவு செய்தார். கட்டியங்காரனிடம் தான் குறித்த அந்த நாளிலே போட்டியாளர்கள் அனைவரும் வரும்படியான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார்.


கட்டியங்காரன் ஏற்பாடு செய்த போட்டியில் யாரெல்லாம் கலந்து கொண்டனர்? என்பதை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்...!!


Comments

Popular posts from this blog

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

குளிரில் நின்றால் பரிசு