ஆகாயத்தில் அழகிய மாளிகை

ஆகாயத்தில் அழகிய மாளிகை


ஆகாயத்தில் அழகிய மாளிகை 

அக்பர் பீர்பால் கதை

ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்த படி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர். 

அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார்.

அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார்.
 என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று 

தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.

 எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. 

அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.

மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். 

அசட்டு தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. 

ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால்.

என்ன பீர்பால் நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார். 

அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற் பாடுகளைச் செய்ய வேண்டும். 

அதனைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். 

அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால். 

தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர்.

பீர்பால் கூறிய படியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

 வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். 

அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால்.

மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால். 

அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். 

அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! 

என்றார் பீர்பால். பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர். 

கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால்.

 அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர். 

அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! 
கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! 
என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது.

அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. 

பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன்.

மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால் தான் முடியும்! 

ஆகையினால் தான் இவைகள் பேசுகின்றன. 

இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். 

ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால்.


பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. 

ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். 

இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் 

என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர்.

கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்...



Comments

Popular posts from this blog

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

குளிரில் நின்றால் பரிசு