அக்பர் பீர்பால் பிரிவு


அக்பர் பீர்பால் பிரிவு


அக்பரும் பீர்பாலும் ஒருமுறை ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. பீர்பால் அரசரை பிரிய மன மில்லாமல் பிரிந்து சென்றார். அரசர் பீர்பாலின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் வருத்தப்பட்டார். அக்பர் படைவீரர்களுக்கு பீர்பால் எங்கு இருந்தாலும் அழைத்து வருமாரு உத்தரவிட்டார். படைவீரர்கள் எங்கு தேடியும் பீர்பால் கிடைக்கவில்லை. இதனால் அக்பர் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார்.
அக்பர் உடனே ஒரு யோசனை செய்து, அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் ஒரு ஓலை அனுப்பினார். அந்த ஓலையில் கூறியிருந்தாவது, எங்கள் நாட்டில் உள்ள கடல்களுக்கும், மலைகளுக்கும் திருமணம் நடத்த உள்ளோம் எனவே உங்கள் நாட்டில் உள்ள கடலையும் மலைகலையும் திருமணத்திற்கு அனுப்பும்மாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.
அக்பரின் ஓலையை கண்டு ஒரு அரசன் பதில் ஒலை அனுப்பிருந்தார் அதில் என் அன்பிற்குரிய அரசே உங்கள் நாட்டில் நடக்கும் திருமணத்திற்கு எங்கள் நாட்டில் உள்ள கடல்களும், மலைகளும் வாழ்த்த வருகின்றன எனவே உங்கள் நாட்டில் உள்ள குளங்களையும், ஏரிகளையும் வரவேற்க தயாராக இருக்க சொல்லுங்கள் என்று எழுதி இருந்தது. இதை கண்ட அக்பர் வியந்தார். பிறகு இப்படிபட்ட பதில் ஒருவனால் தான் முடியும் அது பீர்பாலாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து படைவீரர்களை அந்த நாட்டிற்கு அனுப்பி பீர்பாலை அழைத்து வர கட்டளையிட்டார்.


பீர்பாலும் அக்பர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். அக்பர் பீர்பலை மிகவும் சந்தோசத்துடன் கட்டி ஆர தழவிக்கொண்டார். பிறகு அந்த பதில் கடிதத்துக்கு அர்த்தத்தை வினவினார். அதற்கு பீர்பால் அரசே சூரிய உஷ்ணத்தில் கடல் நீர் அவியாகி மழை நீராக நாட்டில் பொழியும் அறிகுறிகள் இருந்தன எனவே தான் நான் அப்படி எழுதினேன் என்று கூறினார்...

Comments

Popular posts from this blog

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

குளிரில் நின்றால் பரிசு