காரணம் என்ன?

காரணம் என்ன?

அக்பரின் அரச சபையில் அறிஞர்களும் புலவர்களும் கூடியிருந்தார்கள். அப்போது அக்பர் திடீரென்று ஒரு கேள்வியை சபையில் கேட்டார். என் உள்ளங்கையில் ஏன் ரோமம் முளைக்க வில்லை? என்று கேட்டார்.

அக்பரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சபையில் உள்ளோர் திகைத்துப் போனார்கள். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் பீர்பால் மன்னரிடம் சாதுர்யமாய் எதையாவது கூறி நல்ல பெயரை தட்டிச் சென்று விடுவாரே என்ற கவலை இருந்தாலும் அக்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சபையில் உள்ளோர் அனைவரும் மெளனம் சாதித்ததை கண்டதும் அக்பர் என்ன பீர்பால் நீங்களே சொல்லுங்கள் என்றார் மன்னர்.

தங்களது பொற்கரங்களால் அனைவருக்கும் பொருளை வாரி வழங்குகிறீர்கள். தொடர்ந்து செல்வத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் தங்களது உள்ளங்கையில் ரோமம் முளைக்க வில்லை! என்றார் பீர்பால். அக்பர் அத்துடன் விடவில்லை பீர்பாலிடம், உங்கள் கைகளில் ரோமம் முளைக்காததற்கான காரணம்? என்று கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல் பீர்பால் ஒவ்வொரு நாளும் தங்களிடம் அன்பளிப்பை என் கைகள் பெற்றுக் கொண்டே உள்ளது அல்லவா? அதனால் என் கரங்களில் ரோமம் முளாக்காமல் உள்ளது! பீர்பால் நம் இருவரது கைகளிலும் ரோமம் முளைக்காததற்கு காரணத்தைக் கூறிவிட்டீர்கள். ஆனால் சபையில் உள்ள இவர்களின் கைகளில் ஏன் முளைக்க வில்லை என்று பீர்பாலைக் கண்டு பொறாமைப் படுவோரை சுட்டிக் காட்டினார்.

பாதுஷா அவர்களே ஒவ்வொரு நாளும் தாங்கள் எனக்கு அளிக்கும் பரிசுகளைப் பார்த்து, பொறாமை உணர்வால் கைகளை பிசைந்து கொண்டிருப்பதால் இவர்களின் கைகளில் ரோமம் முளைக்க வில்லை. பீர்பலின் சாதுர்யமான பதிலைக் கேட்டு அக்பர் தன்னை மறந்து சிரித்தார்...

Comments

Popular posts from this blog

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

குளிரில் நின்றால் பரிசு