கெட்ட சகுணம்

கெட்ட சகுணம் அக்பர், பீர்பாலிடம் பொதுவான விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, பீர்பால் உங்களுக்கு சகுணங்களில் நம்பிக்கை உண்டா? நம் நாட்டில் கெட்ட சகுணம் என்று சொல்லுமளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்றார். அக்பர் பீர்பால் கதை அக்பரின் கேள்வி பீர்பாலை வேதனை அடைய வைத்தது. அறிவு பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அரசர். இப்படி மூட நம்பிக்கைகளில் தம் மனதை திசை திருப்புவது, பீர்பாலுக்கு பிடிக்கவில்லை. தம் மனதுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசே மற்றவர்கள் கண்டு வெறுக்கும் படியான கெட்ட சகுனம் மிக்க ஒருவன் இவ்வூரில் வசிக்கிறான், காலையில் யாரும் அவனது முகத்தில் விழித்தாலே அன்றைய பொழுது முழுவதும் ஒரு வாய் சோறு கூட கிடைக்காது, படாத பாடு பாட வேண்டும் என்றார் பீர்பால். அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியை நான் பார்க்க வேண்டும் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள், அவன் முகத்தில் நான் விழிக்கிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்று ஆவல் பொங்க கூறினார் அக்பர். அடுத்த நாள் இரவு பீர்பால் ஒருவனை அழைத்து வந்தார். அரண்மனையில் தங்க வைத்தார். அக்பர் படுத்துறங்கும் அறையிலே...